நெல்லை:

நெல்லை பாளையம்கோட்டை ராமர் கோவில் திடலில் வீரன் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த தமிழிசை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.