கோவா:

கோவாவில் மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கோவா காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தராம் நாயக் பனாஜியில் மாநில டிஜிபி முக்தேஷ் சந்தரை ச ந்தித்தார். இதன் பிறகு நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என எந்த மதமாக இருந்தாலும் இது போன்ற தாக்குதல்களை ஏற்க முடியாது.

காவல் துறையினர் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சிபிஐ தான் நடுநிலையான விசாரணை முகமையாக இருக்க முடியாது.

அவர்கள் இந்த வழக்குகளை விசாரித்தால் தான் நன்றாக இருக்கும். முதல்வர் மனோகர் பரிக்கர் அமெரி க்கா செல்வதற்கு முன் உள்துறை பொறுப்பை இதர அமைச்சர்களிடம் யாரிடமாவது ஒப்படைத்து விட்டு சென்றிருக்க வேண்டும்’’ என்றார்.

தெற்கு கோவா மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள பல கல்லறைகளை மர்ம நபர்கள் நேற்றிரவு சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் 9 புனித சிலுவைகள் மற்றும் ஒரு கோவிலும் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவா மாநிலத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட் டுள்ளது.