டெல்லி:
மத்திய கிழக்கு நாடுகளோடு இந்தியா கடந்த 1992ம் ஆண்டு முதல் ராஜாங்க உறவுகளை கொண்டுள்ளது. முதன் முதலில் தற்போதைய எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமியின் அலுவலக வீட்டில் இருந்து தான் இந்தியர்களுக்கு இஸ்ரேல் விசா வழங்கப்பட்டது.
தற்போதும் அந்த வீட்டின் மேற்புறத்தில் இஸ்ரேல் கொடி பறப்பதை பார்க்க முடியும். 1992ம் ஆண்டில் ஜனதா கட்சியில் இருந்த சுவாமி உ.பி.யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டானர். ஆனால், இஸ்ரேல் உடனான ராஜாங்க தொடர்புகள் சுவாமியின் ஆதரவுடன் 1977ம் ஆண்டிலேயே தொடங்கியது.
1992ம் ஆண்டு இஸ்ரேலுடனான முழு ராஜாங்க உறவுகளை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்தினார். அதன் பிறகு தான் தற்போதைய சுப்ரமணியசுவாமியின் வீட்டில் தற்காலிக விசா வழங்கும் மையம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரியாக இருந்தவர் மும்பையில் இருந்து பறந்த வந்து டெல்லியில் பொறுப்பேற்றார்.
அப்போது இஸ்ரேலுக்கு மட்டுமே டெல்லிக்கு வெளியில் பாம்பேயில் தூதரக அலுவலகம் இருந்தது. 1988ம் ஆண்டுகளில் டெல்லியை சேர்ந்த 5 பத்திரிக்கையாளர்கள் இஸ்ரேல் செல்ல விசா பெற முடியாத நிலை இருந்தது. மும்பை செல்ல அவர்களிடம் போதுமான நிதி இல்லாதது தான் காரணம் என்று கடந்த மாதம் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
அரபு நாடுகளின் உணர்வுகளை புணபடுத்த விரும்பாத நேரு, இஸ்ரேலுடன் முழு ராஜாங்க உறவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். 1947ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் அரசாங்கம், அரபு நாடுகள் மற்றும் இந்திய முஸ்லிம்களின் அழுத்தம் காரணமாக இஸ்ரேலுடன் முழு ராஜாங்க உறவுகளை மேற்கொள்ளவில்லை என்ற கருத்துக்களும் அப்போது முன்வைக்கப்பட்டது.
‘‘1977ம் ஆண்டு முதல் நான் மேற்கொண்டு வந்த பிரச்சாரத்திற்கு பலன் கிடைக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்போது அது நடந்துவிட்டது’’ என்று இஸ்ரேலுக்கு மோடி பயணம் செய்திருப்பது குறித்து சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.