டில்லி

ருமானத்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி பற்றி உலவி வரும் ஊகங்களையும் அதைப் பற்றிய உண்மைகளையும் விளக்கியுள்ளார்.

ஜி எஸ் டி அமுலானதிலிருந்தே பல ஊகங்கள் உலவி வருகின்றன.  உண்மை நிலை தெரியாமலே, ஆதரிப்போர் அதை உயர்த்தியும்,  எதிர்ப்போர் அதை தாழ்த்தியும் பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் வருமானத்துறை செயலாளர் பொதுவான 7 ஊகங்களையும்,  அதன் உண்மை நிலையையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கி உள்ளார்.

அவைகள் :

ஊகம் 1 : அனைத்து பில்களும் கம்ப்யூட்டரின் மூலம் மட்டும் தான் உருவாக்க வேண்டும்

உண்மை 1 : கையால் எழுதும் பில்களும் செல்லுபடி ஆகும்

ஊகம் 2 : ஜிஎஸ்டியின் கீழ் வாணிபம் செய்ய இண்டர்நெட் இணப்பு அத்தியாவசியம்

உண்மை 2 : மாதாந்திர ரிடர்ன் பதியும் போது மட்டுமே இண்டர்நெட் இணைப்பு தேவைப்படும்

ஊகம் 3 : தற்காலிக பதிவு எண்ணுடன் வியாபாரம் செய்ய இயலாது,  நிரந்தர எண் வரும்வரை காத்திருக்க வேண்டும்

உண்மை 3 : தற்காலிக எண்ணே பின்னால் நிரந்தரமாக்கப்படும்,  எனவே உடனடியாக வியாபாரத்தை துவக்கலாம்

ஊகம் 4 : வாணிபப் பொருள் தற்போதிலிருந்து தான் வரிவிதிப்புக்கு உள்ளானதால் பதிவு எண் வரும்வரை வாணிபம் செய்யக்கூடாது.

உண்மை 4 : வாணிபத்தை தொடரலாம். 30 நாட்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும்

ஊகம் 5 : ஒரு மாதத்துக்கு 3 ரிடர்ன்கள் பதிவு செய்ய வேண்டும்

உண்மை 5 : ஒரே ரிடர்ன் பதிவு செய்ய வேண்டும்,  அது மூன்று பகுதிகளைக் கொண்டது,  முதல் பகுதியை மட்டும் விற்பனையாளர் பதிந்தால், மற்ற இரண்டைய்யும் கம்ப்யூட்டர் ஆட்டோமேட்டிக்காக அதுவே பதிந்துவிடும்

ஊகம் 6 : சிறு வியாபாரிகளும் பில் விவரங்களுடன் ரிடர்ன் பதிவு செய்ய வேண்டும்

உண்மை 6 : சிறு வியாபாரிகள் மொத்த வியாபாரத்தை ரிடர்னில் பதிவு செய்தால் போதுமானது.

ஊகம் 7 : முந்தைய வாட் வரியை விட ஜிஎஸ்டி அதிகம்

உண்மை 7 : அப்படிப் பார்வைக்கு தெரிகின்றது.  முன்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்த ஆயத்தீர்வை, இதர வரிகள் போன்றவை தற்போது ஜிஎஸ்டியில் சேர்ந்திருப்பதால் அதிகமாகத் தோன்றுகிறது

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதியா பதிந்துள்ளார்.