லில்லே:
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்பகுதிகளுக்கு இடையே சரக்கு கப்பலுடன் டேங்கர் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்வழி பகுதிகளுக்கு இடையே 38 ஆயிரம் டன் பெட்ரோல், 27 பேருடன் சீ-பிரன்டியர் என்ற டேங்கர் கப்பல் சென்று கொண்டிருந்தது.
அப்போது 22 பேருன் சென்ற 220 மீட்டர் நீளம் கொண்ட ஹுவாயாங் எண்டீவர் சரக்கு கப்பல் அதன் மீது மோதியது. இந்த விபத்து டன்கிர்க் பிரான்ஸ் துறைமுகத்திற்கு 33 கி.மீ., தொலைவில் நடந்தது. இந்த கப்பலில் இந்தியா, சீனாவை சேர்ந்த கப்பல் மாலுமிகளே அதிகம் இருந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
இதுபற்றி இங்கிலாந்து கடற்படை மற்றும் கடலோரகாவல் படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘இரு கப்பல்களும் சேதமடைந்துள்ளது. கப்பல்களுக்குள் தண்ணீர் உட்புகவில்லை. சுற்று சூழல் மாசு ஏற்படவில்லை. கப்பல் மாலுமிகள் யாரும் காயமடையவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினை தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் உயிர் காக்கும் படகுகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.