பாட்னா:
போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மற்றும் டிஜிபி தாகூர், மாநில தலைமைச் செயலாளர் அஞ்சானி குமார் சிங், உள்துறை செயலர் அமிர் சுபாணி, முதல்வரின் செயலாளர் சஞ்சல் குமார், மூத்த போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரது மொபைல் போனில் கேம் விளையாடினார். மற்றொரு அதிகாரி பார்த்ததும் அதை நிறுத்திக்கொண்டார்.
மற்ற போலீஸ் அதிகாரிகள் சிலர் பிரதமர் மோடியின் அமெரிக்கா பயண புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வலம் வந்து கொண்டிருக்கிறது.