பெய்ஜிங்,

இந்திய எல்லை அருகே திபெத் பகுதியில் சிறியரக போர் டாங்கிகளை கொண்டு சீன ராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டது.

‘‘35- -&டி டாங்கிகளை கொண்டு ரானுவம் ஒத்திகையில் ஈடுபட்டது’’ என்று சீன ராணுவ துறை செய்தித் தொடர்பாளர் கொல் வு கியான் தெரிவித்தார்.

திபெத் பகுதியில் புதிய ரக டாங்கிகளை கொண்டு சீன ராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளதா? என கேள்விக்கு இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு எதிராக இந்த ஒத்திகையானது நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘உபகரணங்களை பரிசோதனை செய்வதது தான் ஒத்திகையின் நோக்கம். எந்தஒரு நாட்டையும் இலக்காக கொண்டு பரிசோதனை நடைபெறவில்லை’’ என்றார்.

சீன ராணுவம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டது. இந்தியாவின் பதுங்குக் குழியை சீன ராணுவம் அழித்தது. பதற்றமான சூழ்நிலை அங்கு மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்திய பக்தர்களை சீன எல்லையில் உள்ள மானசரோவர் கைலாய மலைக்கு செல்ல சீனா அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் போர் ஒத்திகை எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.