டில்லி
ஏர் இந்தியாவை விலைக்கு வாங்க மிகவும் மன தைரியம் இருக்க வேண்டும் என மஹிந்திரா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
தாங்க முடியாத நஷ்டம், மற்றும் கடன் காரணமாக அரசுக்கு சொந்தமன ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்று விட அரசு யோசனையில் உள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்குவது பற்றி மஹிந்திரா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.
”இது வரை அரசு, இந்த நிறுவனத்தின் கடனை தள்ளுபடி செய்யுமா என்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. எனவே ஏர் இந்தியாவை வாங்க மிகவும் மனதைரியம் இருக்க வேண்டும், எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை. நான் இவ்வள்வு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என மஹிந்திரா கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஏற்கனவே டாடா போன்ற நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என ஒரு செய்தி மீடியாவில் உலா வருகிறது. அது பற்றி இன்னும் நிச்சயமாக தெரியவில்லை. நெட்டிசன்களில் பலர் ஏர் இந்தியாவை விலைக்கு வாங்குவது தற்கொலைக்குச் சமம் என குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு புதிய செய்தி வந்துள்ளது,
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது என அந்தப் புதிய செய்தி கூறுகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இண்டர் குளோப் ஏவியேஷன் குழுமம் ஆகும்.