சென்னை
சென்னை – பங்களூரு – மைசூரு தடத்தில் அதிவேக ரெயில் விடும் சாத்தியக்கூறு பற்றி ஆராய ஜெர்மனி நாட்டிலிருந்து குழு ஒன்று வருகிறது
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜெர்மன் நாட்டுக்கு ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சென்றிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள ரெயில்பாதை பலவற்றில் அதிவேக ரெயில் விடுவது பற்றி ஜெர்மன் அரசின் உதவியை கோரி இருந்தார். அந்த பாதைகளில் சென்னை – பங்களூரு – மைசூரு பாதையும் ஒன்று.
இந்த தடத்தில் 300 கிமீ வேகத்தில் ரெயில் விடுவது பற்றி யோசனை தெரிவிக்கப்பட்டது. மொத்த தூரம் 450 கிமீ ஆகும். அந்த யோசனை செயல்படுத்த உள்ள சாத்தியக் கூறு பற்றி ஆராய ஜெர்மனி நாட்டில் இருந்து ஒரு குழு இந்தியா வருகிறது. அவர்கள் ஆராய்ந்து அறிக்கை அளித்த பின் அந்த அறிக்கையைப் பொறுத்து வேலைகள் துவங்கும்.
இது தொடர்பாக ஜெர்மனி நாட்டு அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்ற உள்ள இந்திய அதிகாரிகளின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது