திருப்பாவை

 

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’

‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’

‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘

எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

(நாளை காலை பதினாறாம் பாடல்..)