மும்பை

நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மும்பை, மற்றும் சுற்றுப்புறங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் மும்பையில் கன மழை பெய்து வருகிறது.  நகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரையிலும் கொலாபா ஆப்சர்வேடரியில் 56.8 மிமீ மழையும், சாந்தாக்ரூஸ் ஆப்சர்வேடரியில் 12.8 மி மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஆனால் இன்று மதியம் 12 முதல் 1 மணி வரை பெய்த மழையின் விவரம் பின் வருமாறு

தாதர் – 11 மிமீ

விக்ரோலி – 24 மி மீ

குர்லா – 14 மி மீ

டிண்டோஷி – 18 மிமீ

அந்தேரி – 18 மி மீ

பாந்த்ரா – 10 மி மீ

மழை காரணமாக புறநகர் ரெயில் மிகவும் மெதுவாக இயக்கப்படுகிறது,   எந்த நேரமும் நிறுத்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.   சாலைப் போக்குவரது அடியோடு நின்றுவிட்டது.

இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடலில் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது.   4.81 மீட்டர் உயரம் வரை அலைகள் அடிக்கின்றன.   பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், அங்கு வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.