டில்லி:

பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்  இது குறித்து தெரிவித்ததாவது:

“பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு சுமூகமாக இருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு பெரும் நன்மைகளை அளிக்கும். பயங்கரவாத ஓழிப்பு, என்.எஸ்.ஜி., ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  இரு தலைவர்களும் பேசினர்.  இரு நாட்டு வர்த்தகம் குறித்தும் பேசினர்.

பதான் கோட் தாக்குதலில் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி பாக்., தனது நாட்டில்  பயங்கர வாதத்தை  வளர்ப்பதை நாம் அனுமதிக்க கூடாது என்றார்.  சையத் சலாஹூதீன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நல்ல துவக்கமாக கருதுகிறோம் .

மேலும் மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல், பதான் கோட் தாக்குதல், உள்ளிட்ட எல்லை தாண்டிய தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க பாக்.,கிற்கு கோரும் விவகாரமும் விவாதிக்கப்பட்டது.

இந்தியா வர டிரம்பிற்கு மோடி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்” என்று அவர் தெரிவித்தார்.