டில்லி

பிறையை கண்டதால் இன்று ரமலான் பண்டிகை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

ரம்ஜான் என்பது இஸ்லாமிய வருடக் கணக்கின் படி ஒன்பதாவது மாதம் ஆகும்.   இந்த மாதம் முழுவதும் பகல் பொழுதில் நீரும் அருந்தாமல் விரதம் இருந்து விரத முடிவில் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.  மூன்றாம் பிறையை கண்ணில் கண்டபின்னர் மத குரு உத்தரவளிப்பார் .  அதன் பின் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகும்.

டில்லி ஜாமா மசூதியின் இமாம் சையது அகமது புகாரி பிறையை பிஹார், மேற்கு வங்கம், அசாம், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் காண முடிந்ததால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடலாம் என அறிவித்தார்.  இதே போன்று ஐதராபாத்திலுள்ள பிறை காணும் குழுவும் அறிவித்துள்ளது.

இதையொட்டி  இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளில் ஒன்றான ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.