உலான்பாதர்:
மங்கோலியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அன்குஷ் தஹியா தங்கம் கைப்பற்றினார். வென்றார்.
மங்கோலிய தலைநகர் உலான்பாதர் நகரில் சர்வதேச குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில்ஆசிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்தியா சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 வீரர், வீராங்கனைகள் இந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றனர்.
60 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கொரியாவின் சோய் சோல்-ஐ வீழ்த்தி 19 வயதான இந்திய வீரர் அன்குஷ் தஹியா தங்கப்பதக்கம் வென்றார்.
அன்குஷின் பங்குபெற்ற இ ரண்டாவது சர்வதேச போட்டி இதுவாகும். காமன்மெல்த் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தேவேந்திரோ சிங், மங்கோலியாவின் கண்டுலாம் முன்கன்- எர்டேனேவை தோற்கடித்து வெளிப்பதக்கம் பெற்றார்.