நெட்டிசன்:

காவல்துறை அதிகாரி Sampriya Kumar அவர்களின் முகநூல் பதிவு:

மெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் திருடி விட்டதாக ஹெலினா என்றப் பெண்ணைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . காவல் அதிகாரி அந்தப் பெண்ணிடம் , சூப்பர் மார்க்கெட்டில் என்ன திருடினீர்கள் என்று கேட்டார்.

” அய்யா பசியால்

சம்ப்ரியா குமார் 

வாடிக்கொண்டிருக்கும் என்னுடைய குழந்தைகளுக்குத் தருவதற்காக 5 முட்டைகளைத் திருடிவிட்டேன் என்று கண்ணீரோடு கூறினார் ஹெலினா …. உடனடியாக அந்தக் காவல் அதிகாரி அந்தப் பெண்ணை சூப்பர்மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் வேண்டிய அளவு நிறைய உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்த போது நன்றியோடு அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்…….

சட்டத்தை நடைமுறைப் படுத்துவதோடு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வது பல குற்றங்களை முற்றிலுமாக அகற்றி விடும் என்பதைக் காவல்துறையிலுள்ள நாம் யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ….. மனிதாபிமானம் நம்மில் தழைக்கட்டும் …..

சட்டம் சாதிக்காததைச் சாதாரணமான அன்பு சாதித்து விடும் …… ” ” பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு கேடு செய்வோரை எந்த நிலையிலும் தப்ப விடாமல் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுப்போம் , அப்பாவிகளை அல்ல.