பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 25-ம் தேதி வாஷிங்டன் செல்கிறார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில், ‘‘பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று ஜூன் 25, 26ம் தேதிகளில் வாஷிங்டன் செல்கிறார். 26-ம் தேதி டொனால்டு டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவியேற்றார். அதன் பின்னர் மோடி இரு தரப்பு சந்திப்பாக அவரை சந்திக்கிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.