ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் மாடுகள் ஏற்றி வந்த தமிழக லாரி டிரைவர், கால்நடை துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
உயர்ந்த ரக மாடுகளை இன பெருக்கத்திகு வாங்குவதற்காக தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர். மாடுகளை வாங்கி லாரியை ஏற்றிக் கொண்டு தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பார்மர் மாவட்டத்தில் பசு பாதுகாவலர்கள் சிலர் லாரியை மறித்தனர். ஏங்கே செல்கிறது ? மாடுகளை கொல்ல கொண்டு செல்கிறீர்களா என பல கேள்விகளை கேட்டு துளைத் தெடுத்தனர்.
தொடர்ந்து லாரியை செல்ல விடாமல் தடுத்தர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் லாரி டிரைவர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகளை பயங்கரமாக தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட ரத்தம் கொட்டியத. தொடர்ந்து லாரிக்கு தீ வைக்கவும் முயற்சி செய்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தையும் நிறுத்தினர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து லாரியை மீட்டனர். மேலும் போலீசார் தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன். 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் எஸ்.பி. ககன்தீப் சிங்லா தெரிவித்துள்ளார்.