ஸ்ரீநகர்
பயங்கரவாதிகளின் பொய் பிரச்சாரத்தால் தவறு செய்து விட்டு, இப்போது திருந்தியதாகக் கூறி ஒரு தீவிரவாதி சரணடைந்துள்ளார்
சரணடைந்த தீவிரவாதியின் பெயர் தனீஷ் அகமது. இவர் டேராடூனில் பி எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அப்போது வலைத்தளங்களில் வந்த பல செய்திகளைக் கண்டு, இவர் சில தீவிரவாத இயங்கங்கள் மேல் ஈடுபாடு கொண்டார்.
அத்தோடு இல்லாமல் அது போன்ற குழுக்களில் இருந்த சிலரிடம் இணைய தளம் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
அவர் அவர்களின் பிரச்சாரத்தால் மெல்ல மெல்ல தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார்.
பிறகு தீவிரவாதக் குழுவில் இணைந்தார்
ஹிஜ்புல் குழுவின் கமாண்டரின் இறுதிச் சடங்கில் இவர் கலந்துக் கொண்ட புகைப்படம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
குழுவில் கல்லெறி வீரர்களில் ஒருவராக இருந்தார்.
குழுவில் இணைந்த பின் அந்த தீவிரவாதிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து தன்னையும் மற்ற பல இளைஞர்களையும் குழுவில் இணைத்திருப்பதை அகமது புரிந்துக்கொண்டார்.
பாதுகாப்புப் படையின் உறுதிமொழிக்கிணங்க, தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என அறிந்த பின் குழுவை விட்டு வந்து சரண் அடைந்தார்
பின்பு அவர் கூறியவை இவை
குழுவில் உள்ள பல இளைஞர்கள், அகமது உட்பட துப்பாக்கி மேல் உள்ள விருப்பத்தினாலேயே குழுவில் இணைந்தார்கள்.
ஆனால் அங்கு துப்பாக்கிகள் மற்றவர்களை குழுவில் சேர்க்க மட்டுமே பயன்பட்டன
குழுவின் தலைவர்களில் பலருக்கு பல பெண் சினேகிதிகள் உள்ளனர்
பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் உள்ளூர் வங்கிகளில் கொள்ளை அடிப்பார்கள்
குழுவின் இணைந்த பின் அந்த தீவிரவாதிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து தன்னையும் மற்ற பல இளைஞர்களையும் குழுவில் இணைத்திருப்பதை அகமது புரிந்துக்கொண்டார்.
சில இளைஞர்களை துப்பாக்கி முனையில் குழுவில் சேர்ப்பதையும் கண்டு அவர் குழுவின் மேல் வெறுப்படைந்தார்.
ஆனால் தான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரண் அடைந்தால் தம் உயிருக்கு அபாயம் ஏற்படுமோ என அகமது பயந்தார்.
அதனால் தன் பெற்றோரிடம் பேசி, உறுதிமொழியை வாங்கச் செய்தார்.
அதற்குப் பின் சரணடைந்தார்