கத்தார்
.பஹ்ரைன், எகிப்து, சௌதி அரபியா, ஐக்கிய அரேபிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளன.
கத்தாரின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனங்களை (அல் ஜஸீர உட்பட) தீவிரவாதிகள் கடந்த மாதம் கைப்பற்றி ஆளும் தரப்பிலிருந்து பலவகை செய்திகளை பரப்பின, அதில் ஆளும் எமிர் ஈரான், ஈராக் நாடுகளைப் பற்றி தவறாக கூறியதாக பல செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக கத்தார் நாட்டின் அனைத்து செய்தி நிறுவனங்களும் மற்ற அண்டைநாடுகளால் தடை செய்யப் பட்டன
மேற்குறிப்பிட்ட நாடுகள் கத்தாருடனான கடல், வான் வழி போக்குவரத்தையும் தடை செய்துள்ளன. இதனால் இந்தப் பகுதியின் மிகப் பெரிய வான்வழி சேவையான கத்தார் ஏர்லைன்ஸ் பெரிதும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
இதுபற்றி கத்தார் நாடு எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை