பர்மிங்ஹாம்,

நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 164 ரன்னில்  முடக்கி இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது.

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 124ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவரின் மூக்கை உடைத்து சாதனை படைத்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான், பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டை பிடித்த இந்திய அணியினிர் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர்.

இடையிடையே மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் 48 ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியா வீரர்கள் ரோகித் சர்மாவின் அசத்தலான தொடக்க ஆட்டத்தால் ஆட்டம் சூடுபிடித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கயி கேப்டன் கோலி, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக ரன்கள் மளமளவென எகிறியது.

கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை எட்டினர். 32 பந்துகளில் 53 ரன்களை எடுத்து யுவராஜ்சிங் பட்டையை கிளப்பினார். வெகுநாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங்கின் ஆட்டம் ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியது.  கேப்டன்  விராட் கோலி 81 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்களை இந்திய அணி எடுத்தது.

இதைத்தொடர்ந்து 323 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.  பாகிஸ்தான் அணியினருக்கு  48 ஓவர்களில் 324 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து  ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான், நான்காவது ஓவர் ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.  41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நிதானமாக ஆடி வந்த பாகிஸ்தான் அணி  9-வது ஓவரில்  தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் ஷேஷாட் 12 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பாபர் அஜாம் வந்த வேகத்தில் வெளியேற, அனுபவம் மிகுந்த ஆட்டக்காரரான முகமத் ஹஃபீஸ், தொடக்க ஆட்டக்காரர் அஸார் அலியுடன் இணைந்து ஆட்டத்தை நகர்த்திக்கொண்டிருந்தார்.

இதையடுத்து  அஸார் அலி 50 ரன்கள் எடுத்து  அரைசதம் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேட்சில் வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக்கும் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிய வில்லை. இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் வேளியேறினார். அதையடுத்து களமிறங்கிய இமாத் வாஸிம் ரன் எடுக்காமல்ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து மட்டையை பிடித்த பாகிஸ்தான் வீரர்கள்  தொடர்ந்து வந்தவேகத்தில் வெளியேறியதால்,33.4 ஓவருக்கு ஆள்அவுட் ஆகி பாகிஸ்தான் சுருண்டது.

பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.   ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி  124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது.

இந்திய அணியின்  வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

போட்டிக்கு நடைபெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவ, பாகிஸ்தான் அணியினருடன் பேசும்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர் வீரர்களை போல எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என பேசி உசுப்பேற்றி இருந்தார்.

தற்போது நடைபெற்று முடிந்த போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அவருடைய மூக்கை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.