பர்மிங்காம்:
மழை பொழிவு காரணமாக டக்வொர்த் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்று உள்ள இந்திய அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானுடன் இன்று பர்மிங்காமில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 2 முறை ஆட்டம் பாதித்து.
இந்தியா 33.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்த நிலையில் 2வது முறையாக மழை பெய்ய தொடங்கியது. மைதானம் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் 6.40 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்புக்கும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டது.
அதாவது ஆட்டம் 49 ஓவர்களுக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மழை விட்ட பிறகு இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. இந்திய அணி 319 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 67 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.
மழை பொழிவு காரணமாக டக்வொர்த் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.