சென்னை:

மாட்டு இறைச்சி திருவிழாவில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி.யில் பயிலும் பிஹெச்டி மாணவர் சராமரியாக தாக்கப்பட்டார்.

இறைச்சிக்காக மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. பல மாநிலங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பயது. கேரளாவில் பொது இடத்தில் மாட்டு இறைச்சி சமைத்து சாப்பிட்டு மாட்டு இறைச்சி உணவு திருவிழாவை நடத்தினர்.

இதேபோல் சென்னை ஐஐடி மாணவர்களில் ஒரு பிரிவினர் கடந்த இரு தினங்களுக்கு முன் மாட்டு இறை ச்சி திருவிழா நடத்தினர். இதில் 70 முதல் 80 மாணவர்கள் வரை கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் பரவியது.

இந்நிலையில் இந்த திருவிழாவில் கலந்துகொண்ட ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் பி.ஹெச்டி மாணவர் சூராஜ் 7 பேர் கொண்ட கும்பலால் சராமரியாக இன்று தாக்கப்பட்டார். மதிய உணவு இடைவேளையின் போது விடுதி கேண்டீனில் இந்த சம்பவம் நடந்தது.

சூரஜூக்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர் க்கப்பட்டுள்ளார் என்று மாட்டு இறைச்சி திருவிழாவை ஒருங்கிணைத்த இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் அபினவ் சூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐஐடி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடமும் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.