ஐதராபாத்:

தெலுங்கு திரைப்பட இயக்குனரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தசாரி நாராயண ராவ் (வயது 75) உடல் நலக் குறைவால் காலமானார்.

ஆந்திரா மாநிலம் கோதாவரியில் உள்ள பாலகொல்லுவில் தசாரி நாராயண ராவ் பிறந்தார். தெலுங்கில் 151 படங்களை இயக்கி உள்ளார். 53 படங்களை தயாரித்துள்ளார். 250 -படங்களில் வசன கர்த்தாவாகவும் பாடல்களை இயற்றி உள்ளார். 2 தேசிய விருதுகள், 9 நந்தி விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ளார். அதிக படங்களை இயக்கி லிம்கா சாதனை பட்டியலில் இடம் பெற்றார். நடிகர் மோகன் பாபுவை தெலுங்கு பட உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தசாரி நாராயண ராவ் மறைவுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.