லக்னோ,
உத்தரபிரதேச மாநில அரசின் பெண் அமைச்சர் ஒருவர் ‘பார்’ ஒன்றை திறந்து வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.
பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவரும் அவரது அரசில், பெண் அமைச்சராக இருப்பவர் சுவாதி சிங்.
இவர் மாநில பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
சமீபத்தில் லக்னோவில் உள்ள பீர் விற்பனை மையத்தின், புதிய பார் ஒன்றை திறந்து வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அவர் பாரின் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அமைச்சர் சுவாதி சிங்குக்கு, முதலவர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மக்களிடையே மது வேண்டாம் என்று வற்புறுத்தி வரும் பாரதியதான அரசிலே, பெண் அமைச்சர் ஒருவரே பார் திறந்து வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.