நெட்டிசன்:
நியாண்டர் செல்வன் (Neander Selvan) அவர்களது முகநூல் பதிவு:
டி-மானிடைசேசன் ஏன் உபி தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
ஏனெனில் அந்த பிரச்சனை இருந்த ஓரிரு மாதம் மக்கள் துன்பட்டார்கள். திட்டினார்கள். ஆனால் ஒரு இயற்கை உத்பாதம் போல அதை விரைவில் கடந்தும் விட்டார்கள். பல தொழில்களுக்கு பெருத்த இடியாக இறங்கியிருக்கவேண்டிய இந்த உத்தரவு அப்படி ஆகாமல் போக காரணம்,
நாட்டின் சரிபாதிக்கும் மேலான பொருளாதாரம் கருப்பில் இயங்குவதே. அந்த நெடொர்க்குகள் மூலம் கருப்புபணம் எளிதில் வெள்ளையாக்கபட்டது. 75 லட்ச ரூபாய் வைத்திருந்த வட்டிக்குபணம் விடும் நண்பரை பற்றி எழுதியிருந்தேன். அவர் அதை கமிசன் கொடுத்து மாற்றிக்கொள்ளத்தான் செய்தார். சில லட்சம் இழப்பு, அவ்வளவுதான்
ஆக அரசின் துக்ளக்தனமான பல உத்தரவுகளில் இருந்து நம்மை இந்த கருப்புபண பொருளாதாரம் தான் காப்பாற்றி வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக தங்கம் கொண்டுவர தடை இருக்கையில், தங்ககடத்தல்காரர்களும், ஹவாலா ஆசாமிகளும் தான் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார்கள். எங்கே அதர்மம் தோன்றுகிறதோ அங்கே நான் அவதரிப்பேன் என்றார் கிருஷ்னர். எங்கே பொருளாதாரத்தின் சந்து, பொந்துகளில் பிரச்சனைகள் தோன்றுகிறதோ அப்போது அதை அடைக்க தோன்றும் கிருஷ்ணபரமாத்மாக்களே இந்த கருப்புபண பொருளாதாரர்கள்.
இவர்கள் நாட்டுநலனை முன்னிறுத்தி இதை செய்வதில்லை. பராசக்தியில் கலைஞர் சொன்னமாதிரி “தடாகத்தில் உள்ள அழுக்கை சாப்பிட்டு அதை சுத்தபடுத்துகிறதே மீன், அதுபோல இவர்கள் சுயநலனில் பொதுநலன் வாழ்கிறது”
இந்த பீஃப் தடையும் அதுபோல் தான் பிசுபிசுக்கும். இத்தனை டாக்குமெண்ட் கொடுத்து யார் வியாபாரம் செய்வார்கள்? வழக்கமாக கொடுக்கும் டாக்குமெண்டை கூட கொடுக்காமல் பழைய கால பாணியில் துண்டை விரித்து விரல்கள் மூலம் பேரம்பேசி கைமாற்றிவிடுவார்கள். அரசுக்கு வரி இழப்பு, அதிகாரிகளுக்கு லஞ்சம். பிசினஸ் பழையபாணியில் ஜாம், ஜாம்னு நடக்கும்.
அரசுக்கு வரியாக போகும் காசு, அதிகாரிகளுக்கு லஞ்சமாக போகும். அவ்வளவுதான் இதன்பலன்.