வாஷிங்டன்:
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுப்பது, பயிற்சி அளிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.
மும்பை தாக்குதல் பின்னணியில் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத்தாவா, லஷ்கர் இ தொய்பா, தலிபான், ஈரானின் கோராசன், சிரியா, ஈராக்கில் உள்ள ஐ.எஸ் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுக்கும் மற்றும் தற்கொலை படை தாக்குதலுக்கு நிதியுதவி அளிக்கும் லஷ்கர், தலிபான், அல்கொய்தா, ஐஎஸ் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கும் அமைப்புகளை முடக்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்யும் அமைப்புகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.