
லக்னோ:
கடந்த 2015ம் ஆண்டு கூகுலில் வெளியான உலகின் தலைசிறந்த முதல் 10 கிரிமினல்கள் பட்டியலில் மோடி பெயர் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூகுள் மீது உ.பியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
உத்தரபிரதேசத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் இயக்கத் தலைவர் ஆர்கே என்பவர் உ.பி. மாநிலத்தில் அவஸ்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், நாட்டிற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழும் பிரதமர் மோடி குறித்து தேடல் களஞ்சியமான கூகுள் தவறான தகவலை பரப்பி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து, கூகுள் நிறுவனம் அதற்கு கண்டனம் தெரிவித்தது.
அப்போது வெளியான உலக 10 கிரிமினல்களான தாவூத் இப்ராஹிம், அல் கபோன், ஜோசப் கோனி மற்றும் அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜாவாரி ஆகியோரின் படத்தினுடே மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்த கூகுள், “இந்தியாவில் முதல் 10 குற்றவாளிகள்” என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி காரணமாக தவறான உருவப்படங்கள் பதிவேற்றியுள்ளதாக கூகிள் கூறியது.
கூகுளில் வெளியான முடிவுகள், கூகுளின் கருத்து அல்ல என்றும், அது எங்கள் நம்பிக்கைகளை பிரதிபலிக்காது என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது உ.பியில் பாரதியஜனதா அரசு ஆட்சி அமைத்துள்ளதை தொடர்ந்து மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]