46 வருடங்களுக்குப் பின் மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது , எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த மாட்டுக்காரவேலன்.
இதில் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் மற்றும் வாலி இருவரும் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கவைக்கும்.
ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன், லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த படம் இது.
தற்போது மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளியாகிறது.