ராஞ்சி:
ஜார்க்கண்ட் பாஜ முதல்வர் ரகுபர்தாஸ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரவு செலவு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே என்று அறிவித்துள்ளார். தற்போது அங்கு பத்திர பதிவு செலவு கட்டணம் 7 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரகுபர்தாஸ் கூறுகையில், ‘‘எங்களது அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பெண்களின் வளர்ச்சி மேம்பாடும். சமூக பாதுகாப்பும் கிடைக்கும். விரைவில் அமைச்சரவை கூட்டம் நடத்தி இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும்’’ என்றார்.
[youtube-feed feed=1]