சென்னை:
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
மேலும், இடையில் விதிக்கப்பட்ட தளர்வும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அதிரடியாக கூறி உள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தளர்வை ரத்து செய்தும், இது தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யும் வரை தடை தொடரும் என்றும் அதிரடியாக கூறி உள்ளனர்.
விசாரணையில்எ வ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தடையை ஏன் நீக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மே 4,5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு அறிவுறுத்தியது,
இதுகுறித்து அரசு சட்டம் இயற்றவும் ஐகோர்ட்டு பரிந்துரை செய்தது.
ஆனால், தமிழக அரசு இதுவரை இதுகுறித்து எந்தவித தகவலும் அளிக்காததால், மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம்.