இலங்கை இசை நிகழ்ச்சி..
இலங்கை இசை நிகழ்ச்சி..

லங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண்கள், தங்கள் உள்ளாடை (பிரா) கழற்றி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதையடுத்து, ” கலாச்சாரம், ஒழுக்கத்தை அழிக்க நினைக்கும் வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் அநாகரீக இசை நிகழ்ச்சிகளுக்கு சவுக்கடி கொடுக்கப்படும்” என அந்தநாட்டுஅதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை, அம்பாராவில் உள்ள, டி.எஸ். செனனாயகே தேசிய பள்ளியில் சமீபத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளம் ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்தது அப்போது இளைஞர்கள் உற்சாகத்தில் தங்கள் உள்ளாடைகளை கழற்றி வீசினர். அதே போல இளம் பெண்களும் தங்கள் உள்ளாடையை (பிரா) கழற்றி மேடை நோக்கி வீசி எறிந்தார்கள். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பிரான்சில்...
பிரான்சில்…

மேற்கத்திய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளின் போது, இது போல இளம் பெண்கள் தங்களது உள்ளாடைகளை கழற்றி வீசுவது வழக்கமான ஒன்று.  குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் அடிக்கடி  இதுபோன்று நடப்பது வழக்கம்.

மேலும் அக்டோபர் 3 ம் தேதியை, “பிரா அணியாத நாள்”என்றே அங்கே கொண்டாடி வருகிறார்கள். அன்று  சில பெண்கள், பொது இடத்தில் பிராவை கழற்றி வீசுவதும் வழக்கமாக உள்ளது.

நோ பிரா டே
நோ பிரா டே

 

அதே போன்ற நிலை இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது குறித்து  அந்நாட்டு அதிபர்  சிறிசேனா வருத்தம் தெரிவித்தார். மேலும், “‘அநாகரீக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இலங்கையின் பெருமைமிக்க கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் வகையில் கலைஞர்களை அழைத்து வரும் ஏற்பாட்டாளர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது. சில மணி நேரத்துக்கு ரூ. 35 ஆயிரம் கட்டணம் செலுத்தி, பெரும்பாலான இளைஞர்கள் குடித்துவிட்டு அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர். போதையில் சில பெண்கள் தங்களது உள்ளாடைகளை (பிராக்களை) கழட்டி கலைஞர்கள் மீது வீசியுள்ளனர். சிலர் மேடையில் ஏறி கலைஞர்களுக்கு முத்தம் கொடுத்துள்ளனர். இது போன்ற அசிங்கமான நிகழ்ச்சிகள் நடத்த இலங்கையில் இனி அனுமதி வழங்க முடியாது’’ என்றார்.