
சென்னை,
மறைந்த ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது அதிமுகவில் நிகழ்ந்துவரும் குழப்பங்களுக்கு பாரதியஜனதா காரணமில்லை என்றும் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு, அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிடவில்லை.
இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel