சென்னை: கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல கிளைகளுடன் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய நிதி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இதற்கிடையில் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல், கோகுலம் நிதி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
Patrikai.com official YouTube Channel