டெல்லி:

உ.பி.தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில வாரியாக பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் தங்களை தாய் கட்சியில் இணைத்துக் கொள்ள முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வாறு திரும்பும் தலைவர்களுக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்ற செய்திகளும் உலா வந்து கொண்டிருக்கிறது.

பாஜ எம்பி வருண்காந்தி தற்போதைய கட்சி தலைவர்களின் மீதான அதிருப்தியில் இருக்கிறார். இவர் தனது உறவினரான ராகுல்காந்தியுடன் நல்ல நட்புறவுடன் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் உ.பி. தேர்தலுகஅகு பிறகு தேசிய அளவில் ஒரு உந்துதலாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.வி தாமஸ் இதற்கான தூபம் போட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களது கட்சிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் பாஜ.வை வலுவான முறையில் எதிர்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியோடு தங்களது கட்சிகளை இணைக்க விரும்பவில்லை என்றால் கூட்டணி அமைக்கவாவது முன்வரவேண்டும். பாஜ அல்லாத அணியை சோனியா காந்தி தலைமையில் உருவாக்க வேண்டும். அதேசமயம் காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தி வழிநடத்த வேண்டும் என்ற குரலும் ஓலிக்க தொடங்கியுள்ளது.


தாமஸ் மேலும் கூறுகையில், ‘‘சரத்பவார், மம்தா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பாஜ.வை எதிர்க்க காங்கிரஸில் இணைய வேண்டும். அவர்கள் கட்சியை காங்கிரசில் இணைப்பது தான் பொருத்தமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜ.வை எதிர்க்க காங்கிரஸ் கட்சியின் அனைத்து முன்னாள் தலைவர்களும் திரும்ப வேண்டும். ஐக்கிய முற்போக்கு ஆட்சி 1, 2ல் சோனியா காந்தி மிக பிரம்மாதமாக செயல்பட்டார். பாஜ அல்லாத கட்சிகளை இணைத்து அவர் செயல்பட்டார். தேசிய நலன் கருதி அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக கொள்கை கொண்ட பாஜ அல்லாத கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் ஒன்றிணைய வேண்டும்.

தாமஸ் மேலும் கூறுகையில், ‘‘கேரளாவில் எதிர்கட்சியாக இருந்தபோதும் தேசிய அளவில் கடந்த க £லஙகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரசோடு இணைந்து பணியாற்றியுள்ளனர். தேசிய முன்னணி என்ற அடிப்படையில் நாம் அனைவரும் இணைய வேண்டும். தேர்தலுக்கு மட்டுமின்றி நாட்டிற்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளில் இணைந்து செயல்பட வேண்டும்.

சமீபத்திய தேர்தல் முடிவுகள் பாஜ.வுக்கு மாற்றான கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பது நிரூபணமாகியுள்ளது. 5 மாநில தேர்தல்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்துள்ளனர். மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், மத்திய அரசின் அதிகாரங்களை பயன்படுத்தி பாஜ ஆட்சி அமைத்துள்ளது’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் பிரபலமாக உள்ள மம்தா தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த தலைமை ஏற்க வேணடும். அவர் இணைந்தால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடை க்கும்.

சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற அடிப்படையில் சரத்பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அதனால் சோனியாவுக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் சரத்பவாரும் தனது கட்சியை இணைப்பதில் தயக்கம் இருக்காது.

தனது தந்தையான ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிறகு ஆந்திரா முதல்வர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று கூறி அவரது மகன் ஜெகன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். த ந்தையின் இடத்தை அவர் நிரப்பமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை தவறாக கருதியதால் அவர் பிரிந்து சென்றார்.

அதனால் இதுபோன்று பிரிந்து சென்றவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் எதிர்வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய இயக்கமாக இரு க்கும் என்பதில் சந்தேகமில்லை என்ற கருத்துக்களும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.