நெட்டிசன்:
டைம்ஸ்நவ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் ஸ்டாலினை இழிவாக பேசினார் என்று சமூகவலைதளங்களில் திமுகவினர் எழுதி வருவதோடு, மணி ரத்தினத்தினத்தை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
இது குறித்து செல்வகுமார் ராஜூ எழுதியுள்ள முகநூல் பதிவு சிந்திக்க வைக்கிறது:
“நண்பர்கள் பலர் மணிரத்னத்தின் பேட்டி குறித்து கடுமையான எதிர்வினை புரிந்து உள்ளதைப் பார்த்தேன். நானும் அதன் அடிப்படையில், நண்பர்களின் எதிர்வினையில் கண்டிப்பாக நியாயம் இருக்கும் என்று நம்பினேன்.
இப்போது தான் அந்த வீடியோவைப் பார்த்தேன்.. எனது கருத்து.
1. அது முழுமையான வீடியோ அல்ல.. Times Now எடிட் பண்ணி வெளியிட்ட சுமார் 3 நிமிடங்கள் ஓடும் ஒரு பகுதி.
2. என்ன கேள்வி கேட்டார்கள் என்பது அந்த வீடியோவில் இல்லை. என்ன கேள்விக்கு என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.
3. அவர்கள் போட்ட clippingsக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் fringe elements பற்றிப் பேசுகிறார். ஸ்டாலினை clippingsல் காட்டுகிறார்கள். அவர் ஸ்டாலினை fringe என்று சொல்லும் அளவுக்கு முட்டாள் என்று இப்போது வரை நான் நம்பவில்லை.
இதற்காக, நான் மணிரத்னம் சொன்னது சரி என்று சொல்லவில்லை. அது பற்றி இப்போது வரை எனக்கு ஒரு கருத்தும் இல்லை. அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அது வரை பொறுத்திருப்பதே நலம் என்று நினைக்கிறேன்.
இது அந்த trp வெறி பிடித்த times now’ன் வேலையாகக் கூட இருக்கலாம். Let us give the benefit of doubt to him till the full interview is telecasted.