
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், முதல்வராக வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். சகாயத்தின் நேர்மை, செயல்பாடு என்று பலவிசயங்கள் பற்றி எழுதுகிறார்கள். இதெல்லாம் சரிதான். ஆனால் சிலர் வித்தியாசமான முறையில் தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

அதாவது “கடவுளே.. ஐயா சகாயம் முதல்வராகணும்.” என்று மட்டுமே வரிசையாக எழுதி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
“போகிற போக்கைப்பார்த்தால் அலகு குத்துவது, மண்சோறு சாப்பிடுவது என்றெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது!
நல்ல மனிதரான சகாயத்துக்கு ஆதரவு அளிப்பதாக நினைத்து சிறுபிள்ளைத்தனமாய் சிலர் நடந்துகொள்கிறார்களே” என்று வருத்தப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Patrikai.com official YouTube Channel