மும்பை:

இந்தியா பணக்காரர்களின் வீடாக திகழ்வதோடு, தீவிர அதிக நிகர மதிப்புடைய தனி நபர்களின் எண்ணிக்கையும் உயரும் நாடாக விளங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 500 அதிக நிகர மதிப்புடைய நபர்கள் இந்தியாவில் உருவாகியிருப்பதாக நைட் பிராங்க் சர்வதேச பணக்கார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு பணக்காரரகள் மேலும் பணிக்காரர்களாவதும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் புதிய அதிக நிகர மதிப்புடைய நபர்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 290 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

2016ம் ஆண்டில் இந்திய செலவம் படைப்பாளிகள் நிலை உலகளவில் 6வது இடத்தில் இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இது 3வது இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக மதிப்புடையவர்கள் உருவாக்கத்தில் 12 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது 30 மில்லியன் டாலர் மதிப்பை தாண்டியுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சதவீதம் 150 மில்லியன் டாலராக இருக்கும். உலகில் உள்ள 2 லட்சத்து 64 ஆயிரத்து 300 மில்லியனர்களில் 2 சதவீதமும், உலக பில்லியனர்களில் 5 சதவீதம் பேரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். புனே 18 சதவீதமும், ஐதராபாத், பெங்களூரு ஆகியவை 15 சதவீதமும், மும்பை 12 சதவீதமும் செல்வம் அதிகரித்துள்ளது.

செல்வ வளம் சேகரிப்பில் உலகளவில் உள்ள 40 நகரங்களில் மும்பை 11வது இடத்தில் உள்ளது. சிகாகோ, சிட்ணி, பாரிஸ், சியோல், துபாய் ஆகியவற்றை முந்தியுள்ளது. நம்நாட்டில் மும்பையில் அதிகப்படியாக ஆயிரத்து 340 தனி நபர் பணக்காரர்கள் உள்ளனர். இதைதொடர்ந்து டெல்லி 680, கொல்கத்தா 280, ஐதராபாத் 260 என்ற நிலையில் உள்ளது. செல்வ சேகரிப்பு குறியீட்டில் மும்பை 21வது இடத்தில் உள்ளது. டெல்லி 35வது இடத்தில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.