உலகில், தொழிற்நுட்ப வளர்ச்சி பல நன்மைகளைச் சமூகத்திற்கு அளித்து வந்தாலும், அது கூடவே சில இடைஞ்சல்களையும் கொடுத்து வருகின்றது.
அவற்றில் முக்கியமான ஒன்று. தானியங்கி கருவிகள், தானியங்கி ரோபோக்களால் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது.
வேகமாகக் குறைந்து ஆக்கிரமிப்புக்கள்,தொழில் வேலைவாய்ப்பு புள்ளியியல் திட்டத் துறை , ஐக்கிய அமெரிக்க தொழில்சார் புள்ளியியல் பணியகம் , பணி நியமன கணிப்புகள் திட்டம் ஆகியவை அளித்துள்ள விவரத்தின்படி 2014 – 2024க்குள் வேகமாய் அழிந்து வரும் தொழிற்வாய்ப்புகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாய் உள்ளன.
ஐக்கிய அமெரிக்க தொழில்சார் புள்ளியியல் பணியகத்தின் (BLS)தகவல்படி , 2014-2024-ஆண்டுகளில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வேலைவாய்ப்பு 6.5 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2014 ல் 150,5 மில்லியன் வேலைகள் இருந்து 2024ம் ஆண்டில் , 160,3 மில்லியன் வேலைகளாக அதிகரிக்கும். இந்த ஆண்டு கூட, ஊதியங்கள் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருட்த்தைவிட இந்த ஆண்டு முழுநேரப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வு இருக்கும் போது, BLS வருங்காலத்தில், பெருகும் வேலைவாய்ப்பு மற்றும் அருகும் வேலைவாய்ப்பு என இரண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய போக்குகளை வைத்துக் கணிக்கும்போது சுகாதாரத்துறை மற்றும் தொழில்நுட்ப வேலைகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
எனினும், சுமார் 200 தொழில்களுக்கான வேலைவாய்ப்பு குறையுமெனத் தெரிவித்துள்ளது. அழிந்து வரும் கருப்பு காண்டாமிருகம் போன்று அழிந்து போகும் தொழில்களும் உள்ளது வேதனைக்குறியது.
உழவுத்தொழில், மீன்பிடித் தொழில் ஆகிய இரண்டு முக்கியத் தொழில்களுக்கான வேலைவாய்ப்பு வெகுவாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2014-2024க்குள் சுமார் 339300 பேர் வேலை இழப்பர் எனப் பி.எல்.எஸ். வலைத்தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கீழ்கண்ட 15 தொழில்கள் அழியும் அபாயத்தில் உள்ளது. மனிதர்களின் இடத்தை ரோபோக்களும், தானியங்கி மென்பொருட்களும் கையகப்படுத்தும்.
1. ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 2014-2024க்குள் 69.9% வேலையிழப்பு ஏற்படும்
இவர்கள் தேடவேண்டிய மாற்று வேலைகள்: லாரி டிரைவர், தொழில்துறை பராமரிப்பு.
2. மின்னணு உபகரணங்கள் நிறுவிகளையும் மற்றும் மோட்டார் வாகனங்கள் ரிப்பேர் செய்பவர்கள் 50% வேலைவாய்ப்பை இழப்பர். இவர்களுக்கான மாற்று வேலைகள்: காற்று சுழலி தொழில்நுட்ப சேவை, சூரிய போட்டோவோல்டிக் நிறுவுதல்.
3. தொலைபேசி ஆபரேட்டர்: பி.எல்.எஸ் கணிப்புபடி 2014-2024 க்குள் 42.4% வேலைகள் இழப்பு ஏற்படும். மாற்று வேலைகள்: வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, கால் சென்டர் பிரதிநிதி.
4. தபால் சேவை மெயில் பிரிப்பாளர்கள், “செயலிகள் மற்றும் செயலாக்க இயந்திர” ஆபரேட்டர்கள் BLS கணிப்புபடி 2014-2024க்குள் வேலைவாய்ப்பு 33.7% குறையும். இவர்களுக்கான மாற்று வேலைகள்: கப்பல் ஒருங்கிணைப்பாளர்.
5. சுவிட்ச்போர்ட் ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல் சேவை
BLS கணிப்புபடி 2014-2024க்குள் 32.9% வேலைவாய்ப்பு இழப்பு நேரிடும்.
மாற்று வேலைகள்: கால் சென்டர் பிரதிநிதி, நிர்வாக உதவியாளர்.
6. புகைப்பட செயல்முறை தொழிலாளர்கள் மற்றும் செயலாக்க இயந்திர ஆபரேட்டர்கள் BLS கணிப்புபடி 2014-2024க்குள் 32.9% வேலைவாய்ப்பு இழப்பு நேரிடும். மாற்று வேலைகள்: டிஜிடல் புகைப்படக்காரர் ஆகலாம்.
7. காலணி இயந்திர ஆபரேட்டர்கள் BLS கணிப்புபடி 2014-2024க்குள் 30.5% வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும்.
மாற்று வேலைகள்: காலணி விற்பனை கூட்டாளி, காலணி வடிவமைப்புகள்
8. தயாரிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் நடமாடும் வீடு நிறுவும் தொழில் செய்வோர்
வேலை விளக்கம்: நகர்த்து அல்லது நடமாடும் வீடுகளைத் தயாரிக்கப்பட்ட கட்டிடங்கள் நிறுவ.
BLS கணிப்புபடி 2014-2024க்குள் 30% வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும்
மாற்று வேலைகள்: சூரியசக்தி நிறுவும் ஒப்பந்ததாரர்
9. உலோக வார்ப்பு அச்சு உற்பத்தியாளர்கள்
BLS கணிப்புபடி 2014-2024க்குள் 27.7 % வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும்
மாற்று வேலைகள்: சூரியசக்தி நிறுவும் ஒப்பந்ததாரர்
10. தையல் இயந்திரம் ஆபரேட்டர்கள். BLS கணிப்புபடி 2014-2024க்குள் 27.1 % வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வேலைகள். ஒரு வழிகாட்ட மட்டுமே. இதைத்தவிர ஒருவர் தன் திறமையாலும், கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தாலும், எந்த ஒரு தொழிலையும் நேர்த்தியாகச் செய்யலாம்.