இந்திய இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை, பிரதமர் மோடி வஞ்சிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அழர்,” நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களான 50 பேர் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியிருந்த ரூ.1.40 லட்சம் கோடி மதிப்பிலான கடன்தொகையை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துவிட்டார். இதன் மூலம், கருப்புப் பணத்தை அவர் ஒழிப்பார் என்று நம்பிய இளைஞர்களை ஏமாற்றிவிட்டார். .
மேலும், விவசாயிகளுக்கும் நலத்திட்டங்களை மோடி அறிவிக்கவில்லை: , அவர்களின் வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை. புதுப்புது திட்டங்களின் பெயரை சொல்லி, விவசாயிகளையும் மோடி வஞ்சித்து வருகிறார்”என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசும்போது, “மோடியின் ஏமாற்று வித்தைகளை, நாட்டு மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். மோடியின் வஞ்சனைகளுக்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.