அங்கோரா:
துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயது குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா,சிரியா மற்றும் ஏமன் போன்ற பல நாடுகளில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக காரணமாக, அங்குள்ள மக்கள் ஆபத்தான கடற்பயணங்கள் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்குஅகதிகளாக குடியேறி வருகிறார்கள்.
இது போன்ற அப்பாவி மக்களை, சட்ட விரோதமாக அழைத்துச் செல்லும் படகு உரிமையாளர்கள்,அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு அகதிகளை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பியநாடுகளுக்குள் செல்கிறார்கள்.
அப்போது பல சமயங்களில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு, பலர் பலியாகும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இது போன்ற விபத்துக்கள் மூலம் இந்த ஆண்டு மட்டும் 2500 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
இந்நிலையில்,சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில்இருந்த 12 பேர் உரிழந்தனர். அவர்களில் படத்தில் உள்ள மூன்று வயது குழந்தையும் ஒன்று.
இந்த குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரியவந்துள்ளது.
இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, உலகை உலுக்கி வருகிறது இந்த படம். வியட்நாம் போரின் கொடூரத்தை ஒரு சிறுமியின் நிர்வாண அலறல் நிறுத்தியது. அந்த புகைப்படத்தைப் பார்த்த உலக மக்கள்.. குறிப்பாக அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதுபோல இன்த அய்லான் குர்தியின் புகைப்படம், அகதிகளின் சோகத்தை போக்குவதாக அமையட்டும்.