பிரேக்கிங் நியூஸ் போயி, பிக் பிரேக்கிங் நியூஸ் வர ஆரம்பிச்சிருச்சு. நம்மால முடிஞ்ச பிக் பிரேக்கிங் கொடுக்கணுமில்ல.
அதான் யோசிச்சேன். எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இருக்க, எடப்பாடியை ஏன் சசிகலா தேர்ந்தெடுத்தாரு?
இந்த பின்னணிய கண்டுபிடிக்க, ஒரு இன்வெஸ்டிகேசன் ஜர்னலிசம் செய்யலாம்னு முடிவு பண்ணேன்.
“பிரிக்க முடியாதது” அப்படிங்கிற பட்டியல்ல, நம்ம ஜோசியருங்களையும் அரசியலையும் சேர்த்து ரொம்பநாள் ஆச்சே.
அதனால, அதே ரூட்ல போகலாம்னு முடிவு பண்ணேன்.
ஜே.என்.எஸ். செல்வேன் அப்படிங்கிற நியூமராலஜிஸ்ட். நம்ம நண்பர்தான். உலகம் முழுக்க சுத்தறவர். ரொம்ப பிஸியா இருக்கற அவருகிட்ட இந்த கேள்வியை கேட்டேன்.
அதுக்கு அவரு, “சசிகலா பிறந்த தேதி: 29. 2 + 9 = 11. 1 +1= 2. ஆக, இரண்டுதான் அவருக்கு பிறந்த நாள் எண்.
அதே போல, எடப்பாடி பழனிச்சாமி பிறந்த தேதி: 2.
இரண்டு பேருக்கும் ஒரே எண் வருதா. இது ஒரு காரணம்.
அப்புறம் இன்னொன்னும் இருக்கு. பிறந்த தேதி, மாதம், வருடம்.. எல்லாத்தையும் கூட்டினா வருவது மூல எண்.
சசிகலா பிறந்தநாள்: 29.01.1956. இந்த எண்களை கூட்டினா வரும் மூல எண்: 6.
எடப்பாடி பிறந்தநாள்: 02.03.1954. இந்த எண்களை கூட்டினா, வரும் மூல எண்: 8.
ஆக பிறந்தநாளுக்குரிய எண்ணும், மூல எண்ணும் இருவருக்கும் ஒரே மாதிரி இருக்கு. அதனாலதான் இயல்பாகவே, எடப்பாடி மேல சசிகலாவுக்கு நம்பிக்கை வந்திருக்கும்” அப்படின்னு சொன்னாரு நியூமராலஜிஸ்ட் ஜே.என்.எஸ். செல்வேன்.
ஏற்கெனவே சில ஜோசியருங்க, சசிகலாதான் முதல்வர்னு சொல்லி, அவரு எந்த நேரத்துல பதவியேத்தா நல்லாருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி நாள் நட்சத்திரம் குறிச்சு வெளியிட்டாங்க. பட், அவரு இப்போ சிறையில இருக்காரேன்னு யாரும் கேட்காதீங்க.
என்னால முடிஞ்ச பிரேக்கிங் நியூஸ் இதுதான்!
– இப்படிககு.. உங்கள் ரவுண்ட்ஸ்பாய்.