index5

ப்போ டாக் ஆப்தி சமூகவலைதளம்… பத்திரிகையாளர்களை நோக்கி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காறித்துப்பியதுதான். அவரது செயலை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அது சரியா தப்பா… மூத்த பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கும் முகநூல் பதிவில் இருந்து..

 

 

muthu_1762127g

“துப்புங்க.. எசமான்.. துப்புங்க!” : முத்துராமலிங்கன்:

நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காவே காறித்துப்பலாம் கேப்டன். இங்க அறிவுகெட்டத்தனமா கேள்வி கேட்குறவனுங்க கிட்ட, அறிவிருக்கான்னு கேட்டா மட்டும் தான் பிரஸ் கிலப்புல இருந்து கண்டன அறிக்கை கண்றாவிள்லாம் வரும்.

மத்தபடி ராஜாவோட ஒப்பிடறப்ப நீங்க எவ்வளவு பெரிய ஆள்? அதுவும் குறிப்பா எத்தனை அகாடமி அவார்ட்ஸ்///? ஐய்யகோ…../?

உங்களை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. நீங்க தொடர்ந்து காறிக் காறித் துப்புங்க கேப்டன்…!”

 

10580132_773772882669452_8906084544419484407_n

“துப்புனது தப்பு!” : ஏழுமலை சீனிவாசன்:

ஜெயலலிதாவை பார்த்து இதை கேட்கமுடியுமா? என்று பல தலைவர்கள் அடிக்கடி கேட்கிற கேள்வியைத்தான் விஜயகாந்தும் கேட்டிருக்கிறார். அவர் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது.

ஏனெனில் நாட்டிலேயே, எளிதில் சந்திக்க முடியாத, தொடர்பு கொள்ள முடியாத ஒரே முதலமைச்சர் என்ற பெருமையோடு தமிழகம் வாழ்கிறது.
. .
தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைகூட அரசு தரும் போட்டோக்களை வைத்து மட்டுமே செய்தியாளர்களாலேயெ தெரிந்து கொள்ள முடிகிறது.

நிலைமை இப்படியிருக்கும்போது, முதலமைச்சரை சந்தித்து கேட்பீர்களா என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது.? இந்திய அளவிலான ஊடகங்கள் அனைத் தும், இந்த காரியத்தில் இறங்குவது நேரத்தை வீணடிக் கும் செயல் என்று முடிவுகட்டி யாருமே அங்கே போய் தவம் கிடப்பதில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்றவர்கள் இவ்வள வையும் தெரிந்து வைத்துக்கொண்டு, ஊடகத்துறைக்கு எதிராக பொதுவெளியில் காரித்துப்புவது, அதிலும் ஒரு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் செய்கிற காரியமா இது?

செய்தியாளர்கள் என்ன விஜயகாந்தின் ஜென்ம விரோதி களா? அவர்களை பார்த்து இப்படி பொங்கியிருக்கிறார்? இருந்தபோதிலும் பதிலுக்கு சவால் விட்டு,,,,

சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கே போய் ஆற்றிய கடமைகள் என்ன?

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசிடமும் மக்கள் மத்தி யிலும் அவர் வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்ன?
தன்னால் எம்எல்ஏக்களாகி எதிர் முகாமில் உறவாடிக் கொண்டிருப்பவர்களை எதற்காக கட்சியை விட்டு நீக்காமல் இருக்கிறார்?

மகனின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து தமிழகம் திரும்பியபோது கேட்ட கேள்விகளுக்கு, தாம் இதுவரை பேப்பரே படிக்க வில்லையென்றும், அதனால் தமிழகத்தில் என்ன நடந்த து என்றே தெரியாது என்று சொன்னதை எந்த வகையில் சேர்ப்பது?

– இதுபோன்ற கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கப் போவதில்லை..

மேலே சொன்ன கேள்விகள் அனைத்தும் கேப்டன் டிவி செய்தியாளர் விஜயகாந்திடம் கேட்கிற நிலைவந்தால், ஒரு வேளை ஜெயா டிவி நிருபரேகூட, ஜெயலலிதா விடம் சிக்கலான கேள்விகளை கேட்கலாம்.

சட்டசபையில் நாக்கை துருத்திபேசியது, கட்சி நிர்வாகி களை பொது இடத்தில் கை ஒங்கி தர்ம சங்கடத்திற்குள் ளாக்கியது, தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ என்று நிருபரிடம் சூப்பர் சுப்பராயனாக மாறியது, இப்போது உணர்ச்சிப்பெருக்கில் துப்பி, குணச்சித்திர நடிகராக அவ தாரமென, எல்லாமே ஒரு தலைவருக்குண்டான மாட்சி மைகளாக தெரியவில்லை.

தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாவோ ஏதோ ஒரு அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது உலகிற்கே தெரியும் என்கிறபோது, அவற்றில் பணிபுரிகிற செய்தியாளர்களி டம் வீரத்தை காட்டுவது, அரசின் அவதூறு வழக்குகளை கருணாநிதியைவிட அதிகமாக சந்தித்துவரும் விஜயகாந்த்தின் வீரத்திற்கே இழுக்கு.”