நியூஸ்பாண்ட்:

ளும் அ.தி.மு.க. கட்சியின் கட்சி பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதனால் தமிழக அரசியலில் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான (அ.தி.மு.க.) எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு,  தங்கள் கட்டுப்பாட்டில்  நட்சத்திர ஓட்டலில் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அல்லது நாளை, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக கவர்னர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க. ஸ்டாலின் – ஓ.பி.எஸ்.

அப்படியொரு நிலை ஏற்பட்டால் 89 எம்.எல்.ஏக்கள் கொண்ட தி.மு.க.வின் ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைக்கும் என்று  ஏற்கெனவே பேச்சு அடிபட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சுகள் இருந்தன. ஓ.பி.எஸ்ஸுக்கு அணுக்கமாக அவர் பேசிவந்தார்.   அரசு ரீதியான காரணங்களுக்காக அவரை சந்திக்கவும் செய்தார்.

நேற்று முன்தினம்கூட,, “முதல்வர் பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவிடாமல் தடுத்துள்ளார். மேலும் தன்னையே மிரட்டி ராஜினாமாக் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

“ஓ.பி.எஸ். பின்னணியில் தி.மு.க இருக்கிறது” என்று சசிகலா குற்றம்சாட்டியதும் நடந்தது.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

இந்த நிலையில்,, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், “சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் நிலை ஏற்பட்டால் எங்கள் கட்சி முதல்வர் ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்கும்” என்று அறிவித்தார். மேலும், “இதற்கு பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்க மாட்டோம். அமைச்சர் பதவிகள் உட்பட..” என்றும் அழுத்தமாக தெரிவித்தார்

ஆனால் இக்கருத்தை திடுமென தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்தார். “சுப்புலட்சுமி அப்படிச் சொன்னது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆலோசித்து இது குறித்து முடிவெடுப்பார்கள். வேறுயாரும் இது குறித்து பேச வேண்டாம்” என்றார்.

இதையடுத்து, சுப்புலட்சுமி ஜெகதீசனும், “ஓ.பி.எஸ்ஸை திமுக ஆதரிக்கும் என்று நான் சொல்லவே இல்லை” என்று ஒரேயடியாக மறுத்தார்.

அரசியலில் இது சகஜம் என்றாலும், திமுக இப்படி திடுமென மாறக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாவது:

“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தியின் இல்லம், சென்னை ஆழ்வார் பேட்டை சி.ஐ.டி. காலனியில் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு ராஜாத்தி வாராவாரம் சனிக்கிழமை செல்வார்.

ராஜாத்தி – சசிகலா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருவார். சில முறை எதிர்பாராமல் ஒரே நேரத்தில் இருவரும் வந்துவிடுவது உண்டு. அப்போது பரஸ்பரம் புன்னகைத்துக்கொள்வர். பிறகு இது நட்பாக மாறியது.

இதன் அடிப்டையில்தான்….  மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்த போது, (கடந்த வருடம் அக்டோபர் மாதம்)  அங்கு சென்று சசிகலாவுக்கு ஆறுதல் கூறி வந்தார் ராஜாத்தி.

வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், இரவில் நடந்த இந்த சந்திப்பு அப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“அசாதாரண சூழல் ஏற்பட்டால் தி.மு.கவின் உதவி எங்களுக்குத் தேவைப்படலாம்” என்று சசிகலா தெரிவித்ததாகவும் இதற்கு ராஜாத்தி சம்மதித்ததாகவும் அப்போதே  பேசப்பட்டது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முக்கியஸ்தர்களிடையே சாராய விற்பனை உட்பட சில விசயங்களில் மறைமுக உடன்பாடும் நல்லிணக்கமும் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே இந்தத் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதிரச்சியை ஏற்படுத்தவில்லை.

ஸ்டாலின் – கருணாநிதி – ராஜாத்தி ( தரையில் அமர்ந்திருப்பவர்: கனிமொழி)

சசிகலாவுக்கு ஆதரவாக அப்போதே திமுக தலைவர் கருணாநிதியிடம் ராஜாத்தி தெரிவித்தார். ஆனால் இதை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை. ஆகவே அவருக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவான மனநிலை ஏற்பட்டது. அவரது பேச்சுக்கள் அதை வெளிப்படுத்தின.

இதையடுத்தே சுப்புலட்சுமி ஜெகதீசனும், “ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும்” என்று வெளிப்படையாக அறிவித்தார். இது போன்ற முக்கியமான விசயத்தில் தலைவர், செயல் தலைவரை மீறி தானாக அவர் அறிவிக்க வாய்ப்பே இல்லை.

சுப்புலட்சுமியின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த சசிகாலா, ராஜாத்தியை தொடர்புகொண்டு பேசினார்.  “தி.மு.க. என்னை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்காமல் இருந்தால் போதும்” என்று கோரிக்கை வைத்தார். இதை ராஜாத்தியும் ஏற்றுக்கொண்டார்.

அவர்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டது.   இந்த உடன்பாடு மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட.. அவரும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்தே தனது ஓ.பி.எஸ். ஆதரவு நிலையை தி.மு.க. மாற்றிக்கொண்டது” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.