சென்னை,
ளவு பார்க்கவே அப்போலோ மருத்துவமனையில் நடராஜன் சேர்ந்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.முக. பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர் அப்பல்லோ மருத்துவர்கள்.

இதற்கிடையே நேற்று, உடல் நலக்குறைவு காரணமாக சசிகலாவின் கணவர் ம.நடராஜன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

செய்தியாளர்களிடம் மருத்துவர்கள் எப்படி பேச வேண்டும் என்று “பயிற்சி” கொடுப்பதற்காகவே நடராஜன் அப்பல்லோவில் சேர்ந்தார் என ஒரு தகவல் உலவுகிறது.

இதே கருத்தை, தி.மு.க எம்.எல்.ஏ. அன்பழகனும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இனஅறு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர், ‘ஜெயலலிதா மறைந்து 60 நாட்களில் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் அனைத்தும் சசிகலா வசம் வந்திருப்பதில் சதி நடந்திருக்கிறது.

முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் ஆகும்.

ஜெயலலிதாவுக்காக வாழ்வது உண்மை என்றால் முதலமைச்சர் பதவியை சசிகலா ஏற்கக் கூடாது” என்று தெரிவித்த முனுசாமி, “சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லை என்று அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எந்தவித உடல் உபாதையும் இல்லை. உளவு பார்க்கவே அப்பல்லோவில் சென்று படுத்துக்கொண்டார்” என்று தெரிவித்தார்.