
போடி,
சசிகலாவை முதல்வராக ஏற்க முடியாது. ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும் என்று கோரி, நேற்று இரவு முதல் ஓ.பி.எஸ். தொகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
முதல்வர் ஓ.பி.எஸ் தொகுதியான போடி நாயக்கனூரில் உள்ள வெம்பக்கோட்டை கிராம மக்கள் நேற்றிரவு முதல் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் கூறியதாவது, தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்கக்கூடாது. ஓ.பி.எஸ்தான் பதவியில் நீடிக்க வேண்டும். “ஓ.பி.எஸ். சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை ஏன் மாற்ற வேண்டும். முதல்வர் பதவிக்கு சசிகலா பொறுத்தமானவர் அல்ல. முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்று சசிகலார் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel