ரியாத்:

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதிக்கு வெளியே பணம் அனுப்புவதற்கு கட்டணம் கிடையாது என்று அந்நாட்டு நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.


கச்சா எண்ணைய் விலை குறைந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. மேலும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பு பிடித்தம் செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டது.

இந்நிலையில், புலம்பெயர்ந்த பண அனுப்புதலக்கு 6 சதவீத தீர்வை வசூல் செய்து குறித்த திட்டத்தை பரிசீலனை செய்வதாக சவுதி பேரரசின் சவுரா ஆலோசனை குழு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடனே வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதிக்கு வெளியே எந்த நாட்டிற்கு பணம் அனுப்பினாலும் கட்டணம் கிடையாது என்று சவுதி நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களில் 3 சதவீதம் பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் வரி விலக்கு, அதிக சம்பளம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]