
சென்னை,
தமிழ் நடிகர்கள் உடனே பீட்டா அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று நடிகர், இயக்குநருமான சேரன் காட்டமாக தெரிவித்து உள்ளார்.
தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு, தமிழர்களிடம் இருந்து சம்பாதிக்கும் நடிகர்கள், தமிழக கலாச்சாரத்தை எதிர்த்து வருவது சரியல்ல. அவர்கள் உடனடியாக பீட்டா அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று இயக்குனர், நடிகர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகையில் ஒருசில நடிகர், நடிகைகள் பீட்டாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து, தமிழக இளைஞர்கள் காட்டமாக சமூக வலைதளங்கள் மூலம் அவர்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் நடிகருமான சேரனும் தனது கருத்தை காட்டமாக தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]