காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.


ஆப்கானிஸ்தான் தலைநர் காபூலில் அமெரிக்கா பல்கலைகழகம் அருகில், நூர் மருத்துவமனை அருகிலும் திடீரென இன்று வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவம் தற்கொலை படை தாக்குதலாகும்.

இந்த குண்டு வெடிப்புகளில் 21 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களில் பொதுமக்களும், ராணுவ வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு உள்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை ஜபிகுல்லா முஜாஹித் பயங்கரவாதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.