சென்னை:
சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார்.

எம்ஜிஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் ‛ஆயிரம் நிலவே வா… என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவர் தற்போது சினிமாவில் 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் ஒரு சிறிய விழா நடந்தது.

இதில் பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் தன் மனைவியுடன் கலந்து கொண்டனர்.
சினிமாவிற்கு வருவதற்கு முன் எஸ்.பி.பி. மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். அவரது திறமையை கண்டு அவரை சினிமாவில் அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்தவர் ஜேசுதாஸ். ஆகையால் தனது 50 வருட சினிமா பயணத்தை முன்னிட்டு ஜேசுதாஸூ பாத பூஜை செய்தார்.
Patrikai.com official YouTube Channel