கான்பூர்,
ஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர். 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கான்பூர் அருகே சியல்தா- அஜ்மீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  ரெயிலின் 15 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.  இதன் காரணமாக  பெட்டிகள் நிலைகுலைந்து கவிழ்ந்தன.  இந்த விபத்தில்  2 பேர்  சம்பவ இடத்திலேயே  பலியானார்கள்.  மேலும்  28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ரெயில் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள  ரூரா மற்றும் மேதா ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது தடம் புரண்டது விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 3 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உ.பி. மாநிலம் தேகா மாவட்டத்தில் இந்தோர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளானதில் 140 பேர் இறந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.